Wednesday, June 30, 2021

How to overcome loneliness?/தனிமையை எவ்வாறு கையாள்வது?

 தனிமை எவ்வளவு ஆபத்தானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனின் ஆற்றலை போக்கி, அவனை பலவீனமாக்கும் சக்தி இதற்குண்டு.
  இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை, குடும்ப பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் என பல காரணங்கள் உள்ளன. 
தனிமையில் வாழும் மனிதர்கள் ஏக்கம், மன அழுத்தம், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது தற்போது அதிகரித்துள்ளது. 

 தனிமையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகள்:
 1.நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள்: 
இப்பொழுது தொற்றுநோயால் தனிமை அதிகரித்து வருகிறது. இதனால் உலக அளவில் 24 சதவீதம் பேர் தனிமையை உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. நீங்கள் தனிமையில் இல்லை நமக்காக நம் குடும்பத்தினர்கள் உள்ளார்கள் என்று மனதில் கண்டிப்பாக நினைத்து, தனிமையை நிராகரிக்க வேண்டும். 

 2.தனிமையின் வேரினை கண்டுபிடியுங்கள்:
 வாழ்வில் ஏற்படும் பல துயரங்கள் மற்றும் பிரிவுகளில் காரணமாக ஏற்படும் மனவருத்தம் நாளடைவில் உங்களை தனிமைக்கு அழைத்து சென்றால் இது ஒரு எச்சரிக்கை மணி என்று நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் தனிமையாக உணரும் பொழுது எதனால் இந்த எண்ணம் தோன்றுகிறது, இதிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை மனதில் சிந்தியுங்கள்.  

3. உங்களால் முடிந்தவற்றை மாற்றவும்:
 உங்கள் நிலைமையை பற்றி நீங்கள் என்ன சரி செய்ய முடியும் என்று உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசவும், மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வரலாம். உங்களுடைய அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்யும் பொழுது தனிமையாக உணர்வதை தவிர்க்க முடியும். 

 4.நேரத்தை உருவாக்குங்கள்:
 வெளியே சென்று நண்பர்களை சந்திக்க நேரமில்லை என பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தொலைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது டிவி பார்க்கிறீர்கள். அந்த நேரத்தை மற்றவர்களுடன் மனம் திறந்து பேச பயன்படுத்தலாம். உங்கள் சமூக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள், இதனால் பல நன்மைகளை பெற முடியும்.

5. எதிர்பார்ப்பு வேண்டாம்: மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அவர்களின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். 

இதைத்தவிர தனிமையில் இருந்து விடுபட நல்ல புத்தகங்களை வாசியுங்கள், மனதிற்கு உற்சாகம் அளிக்கும் இசையை கேளுங்கள்.

Monday, June 28, 2021

How Do I stop being lazy ? / சோம்பேறித்தனத்தை எவ்வாறு குறைப்பது

      சோம்பேறிகள் எப்போதும் சொகுசு வாழ்க்கை விரும்புபவர்களாக இருப்பார்கள். அத்துடன் கனவு காண்பது என்பது அவர்களுக்கு மிகப் பிடித்த வேலை. பகல் கனவுகளிலேயே அதிகம் மூழ்கி இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். 

    சோம்பேறித்தனம் என்பது ஒரு மன நோய் கிடையாது,  தவிர்க்க வேண்டிய ஒன்று. அதை உங்களால் மட்டுமே தவிர்க்க முடியும்.   

 சோம்பேறித்தனத்தை தவிர்க்க சில வழிமுறைகள்:

 1.உங்கள் இலக்கை நிர்ணயங்கள்: 
அதிகப்படியான மற்றும் கஷ்டப்படாமல் எளிதில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற கனவை சோம்பேறிகள் தான் காணுவார்கள். இதனால் மன உளைச்சல், வேலையில் ஈடுபாடின்மை மற்றும் குறைந்த தன்னம்பிக்கை போன்ற ஏற்படும். நடைமுறையிலுள்ள குறிக்கோளை நிர்ணயிக்கும் போது அதற்காக உழைக்கும் எண்ணம் தோன்றும், மேலும் அந்த செயலில் தோல்வி கிடைத்தாலும் மனம் நிம்மதி அடையும்.

 2.எதிர்மறை பேச்சை விட்டு விடுங்கள்:
 எதிர்மறையான பேச்சு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களை செய்வதற்கான உங்கள் முயற்சிகளை தகர்த்துவிடும். உங்களை நீங்களே சோம்பேறி என்று கூறுவதும் எதிர்மறையான பேச்சு. எனவே எதிர்மறையான சொற்களை விட்டுவிட்டு என்னால் முடியும் என்று கூறுங்கள் அனைத்தும் சாத்தியமாகும்.

  3.செயல் திட்டத்தை உருவாக்குங்கள்: 
உங்களுக்கு என்று ஒரு திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வேலையும் தள்ளிக் கொண்டே இருப்பதால் எல்லாமே தாமதமாகும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அதில் உள்ள நன்மைகள், தீமைகள் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளை உருவாக்கலாம். இதனால் உங்களின் முயற்சி மற்றும் நம்பிக்கையின் மூலம் எந்த ஒரு செயலும் நன்றாகவே வெற்றியில் முடிவடையும்.

4. உங்கள் பலங்களை பயன்படுத்துங்கள்: 
இலக்குகளை நிர்ணயிக்கும் போது அல்லது ஒவ்வொரு பணியை சமாளிக்கும் போது உங்கள் பலம் என்ன என்பதை பற்றி சிறிது நேரம் சிந்தியுங்கள். பலங்களில் கவனம் செலுத்துவது உற்பத்தித்திறன், நேர்மறையான உணர்வுகள், மற்றும் வேலையில் ஈடுபடுவது அதிகரித்து, சோம்பேறித்தனத்தை குறைக்கிறது.

5. உங்கள் சாதனைகளை அங்கீகரிக்கவும்: 
சிறப்பாக செய்யப்பட்ட ஒரு வேலைக்காக உங்களை நீங்களே மனதில் அங்கீகரித்துக் கொள்வது உங்களை தொடர்ந்து செல்ல ஊக்குவிக்கும். இது நம்பிக்கையையும், எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு செலுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

  6.உதவி கேளுங்கள்:
 உதவி கேட்பது பலவீனத்தின் அடையாளம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உதவி கேட்காதது உங்களை தோல்விக்கு நெருக்கத்தில் கொண்டு செல்லும். அதற்காக அனைத்தையும் மற்றவர்களிடம் கேட்பது அல்லது அவர்களையே செய்யச் சொல்வதும் சோம்பேறித்தனம் தான். உதவி கேட்பது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது மற்றும் உங்களை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றவர்களுடன் இணைக்க உதவுகிறது.

7.கவனச்சிதறலைத் தவிர்க்கவும்: 
 ஒரு பணியை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கும் போது இடையில் ஏற்படும் கவனச்சிதறலைத பொருட்படுத்தக் கூடாது.

 8.ஆர்வமுடன் இருங்கள்:            சலிப்பூட்டும் 
அல்லது கடினமானதாக உள்ள வேலைகளை தவிர்க்க முயற்சிக்காமல், ஆர்வமுடன் செய்தால் எளிதில் முடிவடைந்துவிடும்.

Tuesday, June 22, 2021

How to stop snoring? / snoring control tips/ குறட்டை வராமல் எவ்வாறு தடுப்பது?

     இரவு நேரங்களில் பல குடும்பங்களில் பெரிய பிரச்சினையாக குறட்டை உள்ளது. பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் அதிக வயது உடையவர்களுக்கு தான் குறட்டை பிரச்சனை வரும் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.

     நல்ல தூக்கம் இருந்தால் தான் குறட்டை விடுவார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் காரணமாகத் தான் குறட்டை பிரச்சனை வருகிறது.             மேலைநாடுகளில் குறட்டை விடும் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் அளவிற்கு இந்த குறட்டை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.   

 குறட்டை சத்தம் எப்படி வருகிறது?

 நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

 ஏன் தூக்கத்தில் மட்டும் வருகிறது ?

தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து, மூச்சுப் பாதையின் அளவு குறுகலாகிறது. இந்த குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்லும் பொழுது குறட்டை சத்தம் வருகிறது. மற்றொன்று மல்லாந்து படுத்து உறங்கும்போது, நாக்கு உள் வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடுகிறது. இதனால் மூச்சுப் பாதையில் தடை ஏற்படுவதாலும் குறட்டை உருவாகிறது.     

 காரணிகள்:

 இந்த பிரச்சினைக்கு
 மரபு வழி மற்றும் உடல் பருமன், மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ் வளர்ச்சி, தைராய்டு பிரச்சனை, புகை மற்றும் மது அருந்துவதின் காரணமாக, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளுதல், மல்லாந்து படுத்தல், அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் குறட்டை ஏற்படுகிறது.

10ல் 2 பெண்களுக்கு மாதவிடாய் முடியும் காலத்தில் குறட்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
  

சரி செய்வதற்கான வழிமுறைகள்:

 1.குறட்டையை தடுப்பதற்கு தேன் மிகச் சிறந்த உணவாக உள்ளது. இதனால் மூச்சுக் குழாயில் உள்ள அடைப்புகள், எரிச்சல்கள் மற்றும் தொண்டையில் உள்ள நுண்ணுயிரிகளை கொன்று நல்ல சுவாசத்தை ஏற்படுத்தும்.

2. மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து, தொண்டையை தளர்வடையச் செய்து குறட்டையை உருவாக்குகிறது.

3. மல்லாந்து படுப்பதை தவிர்த்து, ஒரு பக்கமாக சாய்ந்து படுப்பதன் மூலம் குறட்டையை தவிர்க்கலாம்.

4. கழுத்து வலி ஏற்படாதவாறு உயரமான தலையணையை தலைக்கு வைத்து உறங்குவதன் மூலம் குறட்டை ஏற்படுவதை குறைக்கலாம்.

5.குறட்டைக்கு முக்கியக் காரணியாக உடல் பருமன் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உள்ளது. உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்கலாம் மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான துரித உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

6. இரவு நேரங்களில் தொண்டை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே உறங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் குறட்டையைக் குறைக்கலாம்.

 7.தூங்குவதற்கு முன்பு நீர் ஆவி பிடிப்பதன் மூலம், தொண்டையில் படும் ஈரப்பதத்தினால் குறட்டையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மூச்சுவிடுதல் தொடர்பான பிரச்சினைகளும் குணமடையும்.

8. தூக்க பற்றாக்குறையும் குறட்டைக்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே 7 முதல் 9 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும்.


How to control or reduce anger / anger management tips/ கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

        கோபம் என்பது மனிதர்களிடம் தோன்றும் கடுமையான உணர்ச்சி ஆகும்.சராசரியாக எல்லா மனிதருக்கும்  கோபம் உண்டாகும், கோபப்படாத மனிதரே இந்த உலகில் இருக்க முடியாதாம். ஆனால் அது வெளிப்படும் முறையில் தான் வித்தியாசம் இருக்கிறது. இது சிறிய அளவில் இருந்து அதிகப்படியான கோபம் கொண்டதாகவும் இருக்கலாம்.   எடுத்துக்காட்டாக பற்களை கடிப்பது, அழுவது, கைகளை  பிசைந்து கொண்டு இருப்பது, கைகளை ஓங்கி சுவற்றில் குத்துவது, கையில் கிடைத்த பொருட்களை தூக்கி எறிவது, மற்றவர்களை சொற்களால் காயம் செய்வது  போன்றவையாகும்.

     கோபத்தினால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக்கோளாறு, மூளை வாதம், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

 அதிகப்படியான கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் இதயத் துடிப்பு போன்றவை இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.

 கோபம் அதிகரிப்பதனால் உடலில் அதிக ஹார்மோன்கள் சுரந்து தூக்கத்தின் அளவை குறைக்கும்.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும் 
                               _      திருக்குறள் 303

 யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த  சினத்தினால் ஏற்படும்.

  கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:  

1. சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம். உதாரணமாக 1 முதல் 10 வரை மனதில் எண்ணிக்கொண்டே மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பிறகு 1 முதல் 5 வரை எண்ணிக் கொண்டு மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக 10 முதல் 1 வரை தலைகீழாக எண்ணிக் கொண்டு மூச்சை மெதுவாக வெளிவிடுங்கள். இதனால் கோபம் குறைவதோடு மட்டுமல்லாமல்  மனப் பதட்டம் மற்றும் பயமும் குறையும்.

2. நடைபயிற்சி அல்லது மிதிவண்டி பயிற்சி செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் சமநிலையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், கோபத்தின் அளவையும் குறைக்க முடியும்.

3. அதிகம் கோபம் ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் சூழ்நிலைகளில் நாம் வெளிப்படுத்த நினைக்கும் அனைத்து விஷயங்களையும் ஒரு பேப்பரில் எழுதி முடித்தவுடன் அதை கிழித்து விடுங்கள் அல்லது எரித்து விடுங்கள்.

4. கோபம் வரும்போது உங்கள் சொற்களில் கவனம் தேவை. எனவே அமைதியாக இருங்கள் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம்.

5. விரும்பத்தகாத சூழலில் கோபமான மன நிலையைப் போக்க மனதுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம் அல்லது நகைச்சுவை மற்றும் பிடித்தமான பாடலை கேட்கலாம்.

6. கோபம் குறைந்ததும் அதற்கான காரணம் என்னவென்று சுய பரிசீலனை செய்து பாருங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள், மாறாக மற்றவர் மீது தவறு இருந்தால் அதை தெளிவாக என்ன நடந்தது என்பதை பொறுமையாக எடுத்து கூறுங்கள்.

7. அமைதியான மனநிலையை பெற ஒருநாளைக்கு 10 நிமிடமாவது தியானம் செய்யுங்கள், இதனால் கோபத்தை கட்டுப்படுத்த இயலும்.

8. கோபம் வரும் தருணத்தில் அதை குறைக்க சிகரெட் மற்றும் மது அருந்துவதை  தவிர்த்து, நல்ல உணவுகள் மற்றும்  பழங்கள் சாப்பிடுவது உடல் மற்றும் மனம் இரண்டிற்குமே நல்லது.

9. அதிகப்படியான கோபம், கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாக செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

10. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள், மற்றவர்களையும் அன்போடு பாருங்கள்.

Monday, June 21, 2021

How to increase positive thoughts? /நேர்மறையான சிந்தனைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

 நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. ஆனால் அதைத் தீர்மானிப்பது அவர்களுடைய மனநிலை மட்டுமே. நேர்மறையான எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது, துன்பங்களை தாங்கும் நம்பிக்கை கிடைக்கிறது. 
 நேர்மறையான எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

 1.நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் : 
சவாலான சூழ்நிலைகள் மற்றும் தடைகள் வாழ்க்கையின் பகுதியாகும். இவ்வாறான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் போது நல்ல விஷயங்கள் சிறியதாக அல்லது முக்கியம் அற்றதாகவும் தோன்றினாலும் அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள். மேலும் ஒவ்வொரு நாளையும் நேர்மறையான எண்ணங்களோடு தொடங்க வேண்டும். 

 2.நன்றியை தெரிவியுங்கள்: மனதிற்கு ஆறுதலையும் , மகிழ்ச்சியையும் தரும் நபர்கள், தருணங்கள் அல்லது விஷயங்களைப் பற்றி யோசித்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்களிடம் நீங்களே நன்றியை தெரிவிக்க முயற்சிக்கவும். இதனை கடைபிடிப்பதால் மன அழுத்தத்தை குறைப்பதற்கு, சுயமரியாதையை மேம்படுத்துவதற்கும், கடினமான காலங்களில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

3. நகைச்சுவை:
 நகைச்சுவையான தருணத்தில் நன்றாக வாய்விட்டு சிரியுங்கள். இது மன அழுத்தம், சோர்வு , பதட்டம் ஆகியவற்றை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நகைச்சுவையானது நல்ல மனநிலையை மேம்படுத்துகிறது. 

 4.நேர்மறையான நபர்கள்: நேர்மறையான சிந்தனையுடைய நபர்களிடம் நேரத்தை செலவிடுங்கள். இதன்மூலம் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து வெளிவருவதற்கும், உங்களின் எண்ணங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். எதிர்மறையான எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் மன அழுத்தம், உடல் மற்றும் மனம் இரண்டும் பலவீனமடையும்.

 5.நேர்மறை பேச்சு: 
செயல்களை நம்மிடமிருந்து தொடங்கவேண்டும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே என்னால் முடியாது என்று கூறாமல் தோல்வியே ஆனாலும் பரவாயில்லை அது ஒரு அனுபவமாக இருக்கட்டும் என்று முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.

 நேர்மறை எண்ணங்களால் ஏற்படும் நன்மைகள்:

1. நம்மீது நமக்கு நம்பிக்கை வரும். 
2.எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும் சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.
 3.மகிழ்ச்சி அதிகரிக்கும்
 4.மன அழுத்தம் குறைவதால் ஆயுள்காலம் அதிகரிக்கும். 
5.உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமாகும். 

Friday, June 11, 2021

psychology behind colours/ நிறங்களின் உளவியல்

        நிறம் என்பது நமது எண்ண ஓட்டங்களை மாற்றும் தன்மை கொண்டது. நம் வாழ்வில் நிகழும்   ஒவ்வொரு வகையான தருணங்களையும் நமது மனம் ஒவ்வொரு நிறத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.  மேலும் வண்ணம் என்பது நமது வாழ்வுடன் தொடர்புடைய ஒன்றாகும், நாம் எங்கு சென்றாலும் எல்லா பொருளிலும் ஏதோ ஒரு  வண்ணம் கண்டிப்பாக இருக்கும்.   
      அறிவியல் ரீதியாக நிறத்திற்கு என்று சில பண்புகளும், நம்முடைய ஆரோக்கியம் மற்றும் மனதுடன் ஒத்துப் போகக்கூடிய  குணநலன்களை கொண்டுள்ளது.
 அவரவருக்கு என்று  பிடித்தமான நிறம் கண்டிப்பாக இருக்கும், அதன் பின்னணியிலுள்ள  உளவியலை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 

 சிவப்பு 
சிவப்பானது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் நிறம். இது காதல், ஆர்வம், கோபம், வலிமை, சக்தி மற்றும் ஆபத்தை குறிக்கும் வண்ணம். இது மனதிற்கு உற்சாகத்தையும், மன உறுதி இல்லாதவர்களுக்கு நம்பிக்கையையும் தரும்.  சிவப்பு நிறத்தை அணிந்துகொள்வது உங்களை பொறுப்புள்ளவராகவும், ஆற்றல் மிக்கவராகவும் எடுத்துக்காட்டும்.
 ஆரஞ்சு 
இந்த நிறமானது ஊக்கம், நம்பிக்கை, தன்னம்பிக்கை, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை  குறிக்கும் நிறம். சிவப்பு நிறத்தை விட மென்மையானது. ஆரஞ்சு  அதிகம் பெண்களின் ஆற்றலையும், படைப்பின் ஆற்றலையும் குறிக்கிறது. 
 மஞ்சள் 
மஞ்சள் என்பது மனம் மற்றும் புத்தியின் நிறம். மஞ்சள் மனதிற்கு மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறம் கவலை, பதட்டம், பயம் மற்றும் மோதலை ஏற்படுத்தும். 
 பச்சை 
பச்சை நிறமானது இயற்கையின் எழிலையும், உடல்நலம், சமநிலை, வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை குறிக்கிறது. இருப்பினும் அதிகப்படியான பச்சை நிறம் பொறாமை, பேராசை, சுயநலம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். 
  நீல நிறம்
 நம்பிக்கை, அமைதி, விசுவாசம், நேர்மை, பழமைவாதம், எதிலும் முன்கணிப்பு ஆகியவற்றை அறிவுறுத்தும் நிறம். இது ஞானத்தையும் ,உயர்ந்த லட்சியங்களையும் ஊக்குவிக்கும்.  நீல நிறமானது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான வண்ணமாக உள்ளது.
 ஊதா 
கற்பனை மற்றும் ஆன்மீகத்தை ஆதரிக்கும் நிறமாகும். இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் பொதுவாக இறக்கம் உள்ளவர்களாகவும் , மற்றவர்களை ஆதரிப்பது மற்றும் மற்றவர்களை பற்றி சிந்திக்கும் குணத்தை உடையவர்கள். மேலும் கண்ணியத்துடனும் இருப்பார்கள்.
  வெள்ளை 
தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை குறிக்கிறது. இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எப்போதும் நடுநிலை தன்மையை உடையவர்கள். மேலும் வெள்ளை நிறமானது கலாச்சாரம் மற்றும் துக்கத்தின் நிறமாக கருதப்படுகிறது. நேர்மை, எளிமை மற்றும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வண்ணம். 
 கருப்பு 
கருப்பு நிறத்தின் பொருள் மர்மம், சக்தி வாய்ந்தது, நுட்பமான தன்மையை குறிக்கிறது. பொதுவாக இந்த நிறத்தை தீமை மற்றும் விரக்தியின் வண்ணம் என்றும் கூறுவர். அதிகாரதன்மை மற்றும் உறுதியையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் வண்ணம். 
 இளஞ்சிவப்பு அல்லது பிங்க்
 காதல், இரக்கம் மற்றும்  மென்மையுடன் தொடர்புடைய அமைதியான நிறமாக உள்ளது. பெண்களுக்கு அதிகம் பிடித்த நிறம். இந்த நிறமானது மூளைக்கு புத்துணர்வைக் கொடுத்து மனதை மென்மையாக்குகிறது.  

Thursday, June 10, 2021

Tips for good sleep at night/இரவில் நன்றாக தூக்கம் வர சில குறிப்புகள்

      நமது மனம் மற்றும் உடல் இரண்டையும் ஓய்வு பெறச் செய்வது தூக்கம் ஒன்றுதான். தினமும் 7 முதல் 9 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

      உணவுப் பழக்கவழக்கங்கள், மன அமைதியின்மை, வேலைப்பளு, அதிக நேரம் தொலைபேசி மற்றும் தொலைக் காட்சிகளை பார்த்து கொண்டிருப்பதன் மூலம் சிலருக்கு தூக்கம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது நாளடைவில் இன்சோம்னியா எனப்படும் தூக்க பற்றாக்குறை நோய் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 சரிசெய்வதற்கான சில வழிமுறைகள். 

 1.உடற்பயிற்சி
 காலையில் 15 முதல் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம். இதனால் பகலில் உடலுக்கு தேவையான ஆற்றலும் , இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு உதவும். மாலையில் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  
2. யோகா
 உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம், யோகா செய்வதன் மூலம் மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளை நீக்கி உடலிற்கு தேவையான நல்ல உறக்கம் பெற முடியும்.
3.  பகல் தூக்கம்
 பகலில் தூங்கலாம், ஆனால் 15 முதல் 30 நிமிடம் மட்டுமே உறங்கவேண்டும். பிற்பகல் 3 மணிக்கு மேல் இதை செய்ய வேண்டாம்.
4. காபி தவிர்ப்பது நல்லது
 மதிய உணவு உட்கொண்ட பிறகு காபி அருந்துவதை தவிர்க்கலாம். இது உடலின் புத்துணர்ச்சியை தூண்டி தூக்கத்தை கெடுத்துவிடும்.
 

5. உணவு பழக்கவழக்கங்கள் பகலில் நன்றாக வயிறு நிறையும் அளவில் உணவையும், மாறாக இரவில்  எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். இவை தூக்கத்தைக் எடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கும்.
 

6.    படுக்கும் அறை மற்றும் கட்டில் 
உங்கள் தூக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று படுக்கும் அறை மற்றும் கட்டில்.  படுக்கும் அறையை சூடாக அல்லது குளிர்ச்சியாக இல்லாமல் மிதமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் .கட்டில் மற்றும் தலையணை உறங்குவதற்கு நன்றாக மற்றும் சௌகரியமாக இருக்க வேண்டும்.
7. குறைந்த வெளிச்சம் 
இரவில் தூங்கும் போது வெளிச்சம் மிக குறைவாகவே இருக்க வேண்டும். மேலும் தொலைபேசி மற்றும் தொலைக் காட்சியை நீண்ட நேரம் பார்க்க வேண்டாம். இதில் இருந்து வரும் கதிர்கள் தூக்கமின்மை, கண் எரிச்சல் மற்றும் அமைதியற்ற மனநிலையை ஏற்படுத்தும். அதேபோன்று தூங்கும்போது தொலைபேசியை தலைக்கு அருகில் வைக்காமல் தொலைவில் வைத்து உறங்க வேண்டும்.
8. இசை மற்றும் நகைச்சுவை 
இரவு நேரங்களில் பெரும்பாலும் இனிமையான இசையை கேட்பது மற்றும் நகைச்சுவையை பார்ப்பதன் மூலம் மனதிற்கு அமைதி மற்றும் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி தூக்கம் வர உதவும். 

Wednesday, June 9, 2021

mania - signs and symptoms, treatment/ பித்து அல்லது மனக்கிளர்ச்சி

   பித்து அல்லது மேனியா என்பது மனோபாவத்தால் ஏற்படுகின்ற ஒரு வகை நோய் வெளிப்பாடாகும். வழக்கத்திற்கு மாறாக அதிக மகிழ்ச்சி, அதிகம் பேசுதல், தொடர்ந்து அதிக வேலைகளில் ஈடுபடுதல், தன்னைப்பற்றிய மிக உயர்வான எண்ணம் அல்லது கற்பனை இவர்களிடம் காணப்படும். இது மனச் சோர்வு நோய்க்கு எதிரான இயல்புகளைக் கொண்டிருக்கும்.  


 நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
 1.மன அழுத்தம் மற்றும் வாழ்வில் ஏற்பட்ட மிகவும் கடினமான
 நிகழ்வுகளின் வெளிப்பாடாக 

2.மரபணு மற்றும் பரம்பரை காரணிகள்

 3.உடலில் நிகழும் உயிர்வேதியியல் தன்மையின் காரணமாக (மூளையில் ஏற்படும் நரம்பியல் கடத்தியில் ஏற்றத்தாழ்வு) 

 4.பருவகால தாக்கங்கள்

 5.உடலில் ஏற்படும் பக்க விளைவுகள். எடுத்துக்காட்டாக நீண்ட நாட்களாக எடுத்துக்கொள்ளும் மருந்தின் பக்க விளைவு, அதிக போதைப்பொருள் உட்கொள்ளுதல், மூளையில் ஏற்படும் கோளாறுகள் போன்றவை.

அறிகுறிகள்:
1. உயர்ந்த மனநிலை
2. ஆடம்பரமாக செலவு செய்தல்
3. வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான நகைச்சுவை தன்மை, மகிழ்ச்சி, அதிகம் பேசுதல், ஆடுதல், பாடுதல் போன்றவை
4. குற்ற தன்மை அற்ற நிலை
5. வேலைகளில் அதிக ஈடுபாடு செலுத்துதல்
6. எரிச்சல் அடைதல்
7. தங்களைத் தாங்களே உயர்வாக பேசுதல்
8. வழக்கத்திற்கு மாறான அதிக கடவுள் நம்பிக்கை
9. குறைவான தூக்கம் மற்றும் தூக்கத்தை விரும்பாமல் இருப்பது
10. அதிக பாலியல் ஈடுபாடு
11. சிலசமயங்களில் கற்பனைத்திறன் மிகுதியாக இருக்கும். யாரோ ஒருவரின் குரல் தன்னிடம் பேசுவது போன்றதும், ஒருவரின் உருவம் தன் முன் நிற்பதாக எண்ணிக் கொள்ளும் பிரம்மை நிலை.

 சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள்: 
1. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவர்களிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். இதன் மூலம் மட்டுமே இந்த நோயை குறைக்க முடியும்.

2. நோயின் தன்மை அதிகமாக இருக்கும்பொழுது மருத்துவரின் கண்காணிப்பில் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில்எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகிறது. 

3. நோயின் தன்மை குறைந்து வரும் நேரத்தில், உளவியல் ரீதியான ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.  

Monday, June 7, 2021

20 psychological interesting facts in tamil /உளவியல் பற்றிய 20 உண்மைகள்


1. உங்கள் குறிக்கோள்களை மற்றவர்களுக்கு அறிவித்தால், நீங்கள் வெற்றிபெற ஆய்வுகள் குறைவு, நீங்கள் உந்துதலை இழக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
 

2.நேர்மையாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறும் நபர்களே வாழ்வில் அதிகமாக பொய்களை கூறுவார்கள். 
                       
3.திரும்பத் திரும்ப ஒரே பாடலைக் கேட்பவர்கள் மற்றும் பிடித்தமான பாடல் என்று குறிப்பிட்டு கூறும் ஒரு பாடல், அவர்களுடைய மனதிற்கு பிடித்த மற்றும் உணர்வுகளுடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.

 4.கண்ணாடியின் முன் நின்று அதில் தங்களுடைய பிம்பத்தை பார்த்து தங்களுக்குத் தாங்களே பேசிக் கொள்ளும் நபர்கள் மனதளவில் மிகவும் தைரியமானவர் ஆக இருப்பார்கள் என்று உளவியல் கூறுகிறது.
5. தங்களுக்கு பிடித்தமான மற்றும் நன்றாக உணர்கிற ஆடைகளை அணிந்தவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிடிக்காத ஆடைகளை அணிபவர்கள் இருக்கமான மனநிலையுடனும், மற்ற செயல்களில் கவனம் குறைவாக உடையவர்களாக உள்ளார்கள்.
6. ரகசியங்களை மற்றவர்களிடம் பகிரும் தருணத்தில், அவர்களுடைய கண்களை பார்த்து கூறும் பொழுது நீங்கள் கூற வரும் செய்தியை பற்றிய ஈர்ப்பு மற்றும் உண்மையின் தன்மையை அவர்களால் உணர முடியும். இதைத்தான் உளவியல் அறிவியலின் ஈர்ப்பு விதி என்று கூறுகிறார்கள்.    
7. ஆண்களை விட பெண்களே நீண்ட நேரம் மற்றும் அதிக அளவில் கனவு காண்கிறார்கள்.
8. பொதுவாக உறவுகளின் பிரிவு அல்லது முடிவானது மூன்று முதல் ஐந்து மாத இடைவெளிக்கு உள்ளேயே பெருமளவில் நடைபெறுகிறது.
9. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதிரில் உள்ள நபர் அவருடைய மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்தால் அந்த நபர் கூற வரும் கருத்துகளில் அவருக்கு விருப்பமில்லை அல்லது கேட்க ஆர்வமில்லை என்று அர்த்தம்.
10. கோபமாக உள்ள நேரத்தில் ஒருவர் பேசாமல் அமைதியாக இருந்தால் அவர் தவறு செய்தவர் என்று பொருள் அல்ல, வாக்குவாதம் செய்வதை விரும்பவில்லை என்று அர்த்தம்.
11. நகைச்சுவை என்பது நேர்மறையான எண்ணங்கள் மற்றும் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது.அதனால் தான் பெண்கள் நல்ல நகைச்சுவை உணர்வை கொண்ட ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
12. 10ல் 2 பெண்கள் தங்களுக்கான உண்மையான அன்பு எது என்று அறியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கான பொருள் என்னவென்றால் உண்மையான அன்பை புரிந்துகொள்ள முடியாமல் போலியான அன்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
13. பொதுவாக புத்தகத்தை வாசிக்கும் போதும், எழுதும் போதும், இனிமையான இசையை கேட்டுக் கொண்டே அந்த செயலை செய்தால் மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.
14. பெண்களால் ஒரு ரகசியத்தை 47 மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே யாரிடமும் கூறாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
15. ஒருநாளில் சராசரியாக ஆண்கள் 12,500 வார்த்தைகளையும், பெண்கள் 22,000 வார்த்தைகளையும் கூறுகிறார்கள்.
16. நாம் படிக்கும் பொழுது ஒவ்வொரு முப்பதிலிருந்து ஐம்பது நிமிடத்திற்குப் பிறகு கட்டாயமாக பத்து நிமிட ஓய்வு தேவை. இந்த ஓய்வு நாம் படித்தவற்றை மூளையில் சேகரித்து வைத்துக்கொள்ள கொடுக்கும் கால அவகாசம் ஆகும்.
17. ஒரு நபர் ஆனந்தத்தில் அழுதால் அவரின் வலது கண்ணில் இருந்து முதல் துளி கண்ணீர் வரும், மாறாக அந்த நபர் சோகத்தில் அழுதால் இடது கண்ணில் இருந்து முதல் துளி கண்ணீர் வரும் .
18. ஒரு புதிய பேனா கொடுக்கும் பொழுது 95% மக்கள் தங்கள் பெயரையே முதலில் எழுதுகிறார்கள்.
19. ஒருவர் பொய் சொல்லும்போது அதை பிறர் தெரிந்து கொண்டாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் தான் பொய் சொல்லவில்லை என்று கூறினால், அவரின் கண்களை 5 நிமிடம் நாம் சிரித்துக்கொண்டே பார்த்தால் அவர் அப்படியே உண்மையை கூறி விடுவாராம்.   
 
 20.சில சமயங்களில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதேனும் பிரச்சினை குறித்து அதன் மீது அதிக கவனம் செலுத்தி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது பல பிரச்சினைகள் எழுவது போன்ற உணர்வு வெளிப்படும். அதுவே நீங்கள் சாத்தியக்கூறுகள் சார்ந்து யோசித்துப்பாருங்கள் தீர்வு காண நிறைய வாய்ப்பு கிடைக்கும். நமது பார்வை மற்றும் எண்ணத்தில் தான் அடங்கியிருக்கின்றன.

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...