Sunday, July 18, 2021

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம், நம்பிக்கை நம்மிடம் கண்டிப்பாக வேண்டும்.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் சளி, இரும்பல், தலைவலி, ஜலதோசம், மூக்கில் நீர் வடிதல். இவ்வாறான பிரச்சினைகளுக்கு மருந்து, மாத்திரைகள்  எடுத்துக் கொள்வதை தவிர்த்து, நீர் ஆவி பிடிப்பதன் மூலம் எளிதில் சரிசெய்யலாம். நீராவியின் மூலம்  உடலில் ஏற்படும் பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்யலாம்.


நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits:

1.சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், மூக்கில் நீர்வடிதல், நீர் கோர்வை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள் நீராவி பிடிப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

2.ஆவி பிடிப்பதன் மூலம் சைனஸ் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

3.வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கு குழாய் அடைப்பு பிரச்சனையை சரி செய்வதுடன், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.

4.சூடான நீரில் சிலவகையான மூலிகை பொருட்களை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை நாம் ஆவி பிடிப்பதன் மூலம் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேற்றப்படுகிறது.

5. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

6.ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

7. மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

8.மன அழுத்தத்தை குறைக்கவும், மனதையும் உடலையும் அமைதிப்படுத்த நீராவி குளியல் ஒரு சிறந்த முறையாகும். இந்த சூடான வெப்பம் உடலை தூண்டுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கவும், எந்த வித சலசலப்பு இல்லாமல் நிம்மதியாக தூங்க உதவுகிறது. மகிழ்ச்சி ஹார்மோனான எண்டோர்பின்களை வெளியிடுகிறது. நீராவி குளியல் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு உங்கள் தசைகளை தளர்த்தவும் உதவும்.

9.நீராவி சிகிச்சை உடற்பயிற்சியின் பின்னர் சோர்வாக இருக்கும் தசைகள் மீட்கவும், தசையின் விறைப்பு மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கூட இந்த நீராவி சிகிச்சையை மேற்கொள்ளுவார்கள். நீராவி குளியல் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தசைகளை புத்துணர்ச்சி அடைய செய்கிறது.

10.சூடான நீராவி குளியல் வியர்த்தலைத் தூண்டுகிறது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது. நீராவி சிகிச்சை உடலில் தாழ்வெப்பநிலை நிலையைத் தூண்ட உதவுகிறது. இதனால் உடலின் மேற்பரப்பில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நச்சுக்கள் உயிர்வாழ கடினமாக்குகிறது.

No comments:

Post a Comment

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...