விமர்சனம் என்றால் என்ன?
ஒரு நபரின் நடவடிக்கைகள், சூழ்நிலைகள், செயல் ஆகியவற்றை குறித்து மதிப்பீடுகள் செய்ய முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும்.
விமர்சனத்தின் வகைகள்:
1.ஆக்கப்பூர்வமான விமர்சனம்:
குறிப்பிட்ட நடவடிக்கை மற்றும் நிலைமை அல்லது நாம் செய்யும் செயலில் ஏற்படும் தவறுகளை திருத்திக்கொள்ள முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எனப்படும். இதன் மூலம் உங்களை நீங்களே சுய பரிசீலனை செய்து, தவறான செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு சுய மதிப்பை அதிகரிக்க முடியும்.
2.அழிவுகரமான விமர்சனம்:
நன்மைகளையே செய்தாலும் சிலர் அதனை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்வார்கள். இத்தகைய விமர்சனங்கள் சுய மதிப்பினை பாதிக்கிறது. ஒரு நபரின் அழிவு மற்றும் கெடுதலை விளைவிக்கவே இது உபயோகப்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான விமர்சனத்தை தவிர்ப்பது மற்றும் சாமர்த்தியமாக சமாளிப்பது நல்லது.
எவ்வாறு கையாள்வது?
1.விமர்சகரின் நோக்கத்தை நேர்மறையாக மதிப்பிடுங்கள். இந்த விமர்சனம் உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி சிந்திக்க உதவும்.
2. முதலில் உங்களிடம் கூறப்பட்ட கருத்து ஆக்கப்பூர்வமானதா அல்லது அழிவுகரமானதா என்பதை மதிப்பிடுங்கள். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய பல காரணிகள் உள்ளன.
3. ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை வழங்குபவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். ஏனெனில் அர்த்தமுள்ள கருத்துக்களை கூறும் ஒவ்வொரு நபரும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
4. விமர்சனங்களை பெறும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் கோபத்தை வெளிக்காட்ட கூடாது.
5. பொறாமை, விரக்தி மற்றும் கோபத்தினால் விமர்சனம் வெளிவருகிறது என்றால் அதனை தவிர்ப்பது நல்லது.
6. உங்களை ஒருவர் விமர்சித்தால் பதிலுக்கு அவரை விமர்சிக்க வேண்டும் என்று இல்லை. அதற்கு பதிலாக உங்களின் புத்திசாலித்தனத்துடனும், நகைச்சுவையுடனும், வெற்றியின் மூலம் அவர்களுக்கு பதில் அளிக்கலாம்.
7. உங்களுடைய தவறுகளை மற்றவர்கள் கூறும் போது அதை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய தவறை திருத்திக் கொண்டு, சுயமதிப்பை அதிகரிக்க முடியும்.
8. பாராட்டுக்கள் வழங்கப்படும்போது மட்டுமல்ல, நீங்கள் விமர்சிக்கப்படும் போது கூட புன்னகைக்கவும். இதனை செய்வதற்கு மிகவும் சங்கடமாக இருக்கலாம். ஆனால் உங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment