Friday, June 11, 2021

psychology behind colours/ நிறங்களின் உளவியல்

        நிறம் என்பது நமது எண்ண ஓட்டங்களை மாற்றும் தன்மை கொண்டது. நம் வாழ்வில் நிகழும்   ஒவ்வொரு வகையான தருணங்களையும் நமது மனம் ஒவ்வொரு நிறத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.  மேலும் வண்ணம் என்பது நமது வாழ்வுடன் தொடர்புடைய ஒன்றாகும், நாம் எங்கு சென்றாலும் எல்லா பொருளிலும் ஏதோ ஒரு  வண்ணம் கண்டிப்பாக இருக்கும்.   
      அறிவியல் ரீதியாக நிறத்திற்கு என்று சில பண்புகளும், நம்முடைய ஆரோக்கியம் மற்றும் மனதுடன் ஒத்துப் போகக்கூடிய  குணநலன்களை கொண்டுள்ளது.
 அவரவருக்கு என்று  பிடித்தமான நிறம் கண்டிப்பாக இருக்கும், அதன் பின்னணியிலுள்ள  உளவியலை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 

 சிவப்பு 
சிவப்பானது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் நிறம். இது காதல், ஆர்வம், கோபம், வலிமை, சக்தி மற்றும் ஆபத்தை குறிக்கும் வண்ணம். இது மனதிற்கு உற்சாகத்தையும், மன உறுதி இல்லாதவர்களுக்கு நம்பிக்கையையும் தரும்.  சிவப்பு நிறத்தை அணிந்துகொள்வது உங்களை பொறுப்புள்ளவராகவும், ஆற்றல் மிக்கவராகவும் எடுத்துக்காட்டும்.
 ஆரஞ்சு 
இந்த நிறமானது ஊக்கம், நம்பிக்கை, தன்னம்பிக்கை, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை  குறிக்கும் நிறம். சிவப்பு நிறத்தை விட மென்மையானது. ஆரஞ்சு  அதிகம் பெண்களின் ஆற்றலையும், படைப்பின் ஆற்றலையும் குறிக்கிறது. 
 மஞ்சள் 
மஞ்சள் என்பது மனம் மற்றும் புத்தியின் நிறம். மஞ்சள் மனதிற்கு மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறம் கவலை, பதட்டம், பயம் மற்றும் மோதலை ஏற்படுத்தும். 
 பச்சை 
பச்சை நிறமானது இயற்கையின் எழிலையும், உடல்நலம், சமநிலை, வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையை குறிக்கிறது. இருப்பினும் அதிகப்படியான பச்சை நிறம் பொறாமை, பேராசை, சுயநலம் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். 
  நீல நிறம்
 நம்பிக்கை, அமைதி, விசுவாசம், நேர்மை, பழமைவாதம், எதிலும் முன்கணிப்பு ஆகியவற்றை அறிவுறுத்தும் நிறம். இது ஞானத்தையும் ,உயர்ந்த லட்சியங்களையும் ஊக்குவிக்கும்.  நீல நிறமானது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான வண்ணமாக உள்ளது.
 ஊதா 
கற்பனை மற்றும் ஆன்மீகத்தை ஆதரிக்கும் நிறமாகும். இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் பொதுவாக இறக்கம் உள்ளவர்களாகவும் , மற்றவர்களை ஆதரிப்பது மற்றும் மற்றவர்களை பற்றி சிந்திக்கும் குணத்தை உடையவர்கள். மேலும் கண்ணியத்துடனும் இருப்பார்கள்.
  வெள்ளை 
தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை குறிக்கிறது. இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எப்போதும் நடுநிலை தன்மையை உடையவர்கள். மேலும் வெள்ளை நிறமானது கலாச்சாரம் மற்றும் துக்கத்தின் நிறமாக கருதப்படுகிறது. நேர்மை, எளிமை மற்றும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வண்ணம். 
 கருப்பு 
கருப்பு நிறத்தின் பொருள் மர்மம், சக்தி வாய்ந்தது, நுட்பமான தன்மையை குறிக்கிறது. பொதுவாக இந்த நிறத்தை தீமை மற்றும் விரக்தியின் வண்ணம் என்றும் கூறுவர். அதிகாரதன்மை மற்றும் உறுதியையும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் வண்ணம். 
 இளஞ்சிவப்பு அல்லது பிங்க்
 காதல், இரக்கம் மற்றும்  மென்மையுடன் தொடர்புடைய அமைதியான நிறமாக உள்ளது. பெண்களுக்கு அதிகம் பிடித்த நிறம். இந்த நிறமானது மூளைக்கு புத்துணர்வைக் கொடுத்து மனதை மென்மையாக்குகிறது.  

No comments:

Post a Comment

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...