Tuesday, June 22, 2021

How to stop snoring? / snoring control tips/ குறட்டை வராமல் எவ்வாறு தடுப்பது?

     இரவு நேரங்களில் பல குடும்பங்களில் பெரிய பிரச்சினையாக குறட்டை உள்ளது. பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் அதிக வயது உடையவர்களுக்கு தான் குறட்டை பிரச்சனை வரும் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.

     நல்ல தூக்கம் இருந்தால் தான் குறட்டை விடுவார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் காரணமாகத் தான் குறட்டை பிரச்சனை வருகிறது.             மேலைநாடுகளில் குறட்டை விடும் கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் அளவிற்கு இந்த குறட்டை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.   

 குறட்டை சத்தம் எப்படி வருகிறது?

 நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.

 ஏன் தூக்கத்தில் மட்டும் வருகிறது ?

தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து, மூச்சுப் பாதையின் அளவு குறுகலாகிறது. இந்த குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்லும் பொழுது குறட்டை சத்தம் வருகிறது. மற்றொன்று மல்லாந்து படுத்து உறங்கும்போது, நாக்கு உள் வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடுகிறது. இதனால் மூச்சுப் பாதையில் தடை ஏற்படுவதாலும் குறட்டை உருவாகிறது.     

 காரணிகள்:

 இந்த பிரச்சினைக்கு
 மரபு வழி மற்றும் உடல் பருமன், மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ் வளர்ச்சி, தைராய்டு பிரச்சனை, புகை மற்றும் மது அருந்துவதின் காரணமாக, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளுதல், மல்லாந்து படுத்தல், அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவற்றால் குறட்டை ஏற்படுகிறது.

10ல் 2 பெண்களுக்கு மாதவிடாய் முடியும் காலத்தில் குறட்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
  

சரி செய்வதற்கான வழிமுறைகள்:

 1.குறட்டையை தடுப்பதற்கு தேன் மிகச் சிறந்த உணவாக உள்ளது. இதனால் மூச்சுக் குழாயில் உள்ள அடைப்புகள், எரிச்சல்கள் மற்றும் தொண்டையில் உள்ள நுண்ணுயிரிகளை கொன்று நல்ல சுவாசத்தை ஏற்படுத்தும்.

2. மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து, தொண்டையை தளர்வடையச் செய்து குறட்டையை உருவாக்குகிறது.

3. மல்லாந்து படுப்பதை தவிர்த்து, ஒரு பக்கமாக சாய்ந்து படுப்பதன் மூலம் குறட்டையை தவிர்க்கலாம்.

4. கழுத்து வலி ஏற்படாதவாறு உயரமான தலையணையை தலைக்கு வைத்து உறங்குவதன் மூலம் குறட்டை ஏற்படுவதை குறைக்கலாம்.

5.குறட்டைக்கு முக்கியக் காரணியாக உடல் பருமன் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உள்ளது. உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்கலாம் மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான துரித உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

6. இரவு நேரங்களில் தொண்டை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே உறங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் குறட்டையைக் குறைக்கலாம்.

 7.தூங்குவதற்கு முன்பு நீர் ஆவி பிடிப்பதன் மூலம், தொண்டையில் படும் ஈரப்பதத்தினால் குறட்டையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மூச்சுவிடுதல் தொடர்பான பிரச்சினைகளும் குணமடையும்.

8. தூக்க பற்றாக்குறையும் குறட்டைக்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே 7 முதல் 9 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும்.


No comments:

Post a Comment

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...