Monday, June 28, 2021

How Do I stop being lazy ? / சோம்பேறித்தனத்தை எவ்வாறு குறைப்பது

      சோம்பேறிகள் எப்போதும் சொகுசு வாழ்க்கை விரும்புபவர்களாக இருப்பார்கள். அத்துடன் கனவு காண்பது என்பது அவர்களுக்கு மிகப் பிடித்த வேலை. பகல் கனவுகளிலேயே அதிகம் மூழ்கி இருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். 

    சோம்பேறித்தனம் என்பது ஒரு மன நோய் கிடையாது,  தவிர்க்க வேண்டிய ஒன்று. அதை உங்களால் மட்டுமே தவிர்க்க முடியும்.   

 சோம்பேறித்தனத்தை தவிர்க்க சில வழிமுறைகள்:

 1.உங்கள் இலக்கை நிர்ணயங்கள்: 
அதிகப்படியான மற்றும் கஷ்டப்படாமல் எளிதில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற கனவை சோம்பேறிகள் தான் காணுவார்கள். இதனால் மன உளைச்சல், வேலையில் ஈடுபாடின்மை மற்றும் குறைந்த தன்னம்பிக்கை போன்ற ஏற்படும். நடைமுறையிலுள்ள குறிக்கோளை நிர்ணயிக்கும் போது அதற்காக உழைக்கும் எண்ணம் தோன்றும், மேலும் அந்த செயலில் தோல்வி கிடைத்தாலும் மனம் நிம்மதி அடையும்.

 2.எதிர்மறை பேச்சை விட்டு விடுங்கள்:
 எதிர்மறையான பேச்சு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களை செய்வதற்கான உங்கள் முயற்சிகளை தகர்த்துவிடும். உங்களை நீங்களே சோம்பேறி என்று கூறுவதும் எதிர்மறையான பேச்சு. எனவே எதிர்மறையான சொற்களை விட்டுவிட்டு என்னால் முடியும் என்று கூறுங்கள் அனைத்தும் சாத்தியமாகும்.

  3.செயல் திட்டத்தை உருவாக்குங்கள்: 
உங்களுக்கு என்று ஒரு திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு வேலையும் தள்ளிக் கொண்டே இருப்பதால் எல்லாமே தாமதமாகும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்கு அறிந்து அதில் உள்ள நன்மைகள், தீமைகள் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கான வழிமுறைகளை உருவாக்கலாம். இதனால் உங்களின் முயற்சி மற்றும் நம்பிக்கையின் மூலம் எந்த ஒரு செயலும் நன்றாகவே வெற்றியில் முடிவடையும்.

4. உங்கள் பலங்களை பயன்படுத்துங்கள்: 
இலக்குகளை நிர்ணயிக்கும் போது அல்லது ஒவ்வொரு பணியை சமாளிக்கும் போது உங்கள் பலம் என்ன என்பதை பற்றி சிறிது நேரம் சிந்தியுங்கள். பலங்களில் கவனம் செலுத்துவது உற்பத்தித்திறன், நேர்மறையான உணர்வுகள், மற்றும் வேலையில் ஈடுபடுவது அதிகரித்து, சோம்பேறித்தனத்தை குறைக்கிறது.

5. உங்கள் சாதனைகளை அங்கீகரிக்கவும்: 
சிறப்பாக செய்யப்பட்ட ஒரு வேலைக்காக உங்களை நீங்களே மனதில் அங்கீகரித்துக் கொள்வது உங்களை தொடர்ந்து செல்ல ஊக்குவிக்கும். இது நம்பிக்கையையும், எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு செலுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

  6.உதவி கேளுங்கள்:
 உதவி கேட்பது பலவீனத்தின் அடையாளம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உதவி கேட்காதது உங்களை தோல்விக்கு நெருக்கத்தில் கொண்டு செல்லும். அதற்காக அனைத்தையும் மற்றவர்களிடம் கேட்பது அல்லது அவர்களையே செய்யச் சொல்வதும் சோம்பேறித்தனம் தான். உதவி கேட்பது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துகிறது மற்றும் உங்களை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றவர்களுடன் இணைக்க உதவுகிறது.

7.கவனச்சிதறலைத் தவிர்க்கவும்: 
 ஒரு பணியை செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கும் போது இடையில் ஏற்படும் கவனச்சிதறலைத பொருட்படுத்தக் கூடாது.

 8.ஆர்வமுடன் இருங்கள்:            சலிப்பூட்டும் 
அல்லது கடினமானதாக உள்ள வேலைகளை தவிர்க்க முயற்சிக்காமல், ஆர்வமுடன் செய்தால் எளிதில் முடிவடைந்துவிடும்.

No comments:

Post a Comment

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...