இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலை, குடும்ப பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் என பல காரணங்கள் உள்ளன.
தனிமையில் வாழும் மனிதர்கள் ஏக்கம், மன அழுத்தம், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது தற்போது அதிகரித்துள்ளது.
தனிமையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகள்:
1.நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள்:
இப்பொழுது தொற்றுநோயால் தனிமை அதிகரித்து வருகிறது. இதனால் உலக அளவில் 24 சதவீதம் பேர் தனிமையை உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. நீங்கள் தனிமையில் இல்லை நமக்காக நம் குடும்பத்தினர்கள் உள்ளார்கள் என்று மனதில் கண்டிப்பாக நினைத்து, தனிமையை நிராகரிக்க வேண்டும்.
2.தனிமையின் வேரினை கண்டுபிடியுங்கள்:
வாழ்வில் ஏற்படும் பல துயரங்கள் மற்றும் பிரிவுகளில் காரணமாக ஏற்படும் மனவருத்தம் நாளடைவில் உங்களை தனிமைக்கு அழைத்து சென்றால் இது ஒரு எச்சரிக்கை மணி என்று நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் தனிமையாக உணரும் பொழுது எதனால் இந்த எண்ணம் தோன்றுகிறது, இதிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளை மனதில் சிந்தியுங்கள்.
3. உங்களால் முடிந்தவற்றை மாற்றவும்:
உங்கள் நிலைமையை பற்றி நீங்கள் என்ன சரி செய்ய முடியும் என்று உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசவும், மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வரலாம். உங்களுடைய அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்யும் பொழுது தனிமையாக உணர்வதை தவிர்க்க முடியும்.
4.நேரத்தை உருவாக்குங்கள்:
வெளியே சென்று நண்பர்களை சந்திக்க நேரமில்லை என பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தொலைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது டிவி பார்க்கிறீர்கள். அந்த நேரத்தை மற்றவர்களுடன் மனம் திறந்து பேச பயன்படுத்தலாம். உங்கள் சமூக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள், இதனால் பல நன்மைகளை பெற முடியும்.
5. எதிர்பார்ப்பு வேண்டாம்: மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். அவர்களின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதைத்தவிர தனிமையில் இருந்து விடுபட நல்ல புத்தகங்களை வாசியுங்கள், மனதிற்கு உற்சாகம் அளிக்கும் இசையை கேளுங்கள்.
No comments:
Post a Comment