Monday, June 21, 2021

How to increase positive thoughts? /நேர்மறையான சிந்தனைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

 நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை. ஆனால் அதைத் தீர்மானிப்பது அவர்களுடைய மனநிலை மட்டுமே. நேர்மறையான எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது, துன்பங்களை தாங்கும் நம்பிக்கை கிடைக்கிறது. 
 நேர்மறையான எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?

 1.நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் : 
சவாலான சூழ்நிலைகள் மற்றும் தடைகள் வாழ்க்கையின் பகுதியாகும். இவ்வாறான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் போது நல்ல விஷயங்கள் சிறியதாக அல்லது முக்கியம் அற்றதாகவும் தோன்றினாலும் அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள். மேலும் ஒவ்வொரு நாளையும் நேர்மறையான எண்ணங்களோடு தொடங்க வேண்டும். 

 2.நன்றியை தெரிவியுங்கள்: மனதிற்கு ஆறுதலையும் , மகிழ்ச்சியையும் தரும் நபர்கள், தருணங்கள் அல்லது விஷயங்களைப் பற்றி யோசித்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உங்களிடம் நீங்களே நன்றியை தெரிவிக்க முயற்சிக்கவும். இதனை கடைபிடிப்பதால் மன அழுத்தத்தை குறைப்பதற்கு, சுயமரியாதையை மேம்படுத்துவதற்கும், கடினமான காலங்களில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

3. நகைச்சுவை:
 நகைச்சுவையான தருணத்தில் நன்றாக வாய்விட்டு சிரியுங்கள். இது மன அழுத்தம், சோர்வு , பதட்டம் ஆகியவற்றை குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நகைச்சுவையானது நல்ல மனநிலையை மேம்படுத்துகிறது. 

 4.நேர்மறையான நபர்கள்: நேர்மறையான சிந்தனையுடைய நபர்களிடம் நேரத்தை செலவிடுங்கள். இதன்மூலம் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து வெளிவருவதற்கும், உங்களின் எண்ணங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். எதிர்மறையான எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் மன அழுத்தம், உடல் மற்றும் மனம் இரண்டும் பலவீனமடையும்.

 5.நேர்மறை பேச்சு: 
செயல்களை நம்மிடமிருந்து தொடங்கவேண்டும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே என்னால் முடியாது என்று கூறாமல் தோல்வியே ஆனாலும் பரவாயில்லை அது ஒரு அனுபவமாக இருக்கட்டும் என்று முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.

 நேர்மறை எண்ணங்களால் ஏற்படும் நன்மைகள்:

1. நம்மீது நமக்கு நம்பிக்கை வரும். 
2.எந்த இக்கட்டான சூழ்நிலைகளையும் சாமர்த்தியமாக சமாளிக்க முடியும்.
 3.மகிழ்ச்சி அதிகரிக்கும்
 4.மன அழுத்தம் குறைவதால் ஆயுள்காலம் அதிகரிக்கும். 
5.உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமாகும். 

1 comment:

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...