Sunday, June 6, 2021

depression/ மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம்

         ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் சில மோசமான நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை எண்ணி அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்காக வருந்தி இருக்கிறோம், இது  இயல்பு தான். ஆனால் இந்த வருத்தமே நீண்ட நாட்களாக தொடர்ந்து நீடித்தால், அது நாளடைவில் மனச்சோர்வு அல்லது மன அழுத்தமாக மாற்றமடைகிறது.

            மனச்சோர்வு ஒருவரின் அன்றாட செயல்பாடுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
       உலக அளவில் 350 மில்லியன் மக்களிடையே மனச்சோர்வு காணப்படுகிறது அதில் 15 முதல் 45 வரை வயதுடையவர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் பெருமளவில் ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அமெரிக்க ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மனச்சோர்வு எதனால் உருவாகிறது?
 
        எதனால் உருவாகிறது என்று குறிப்பிட்டு யாராலும் கூற முடியாது . ஆனால் சில காரணங்களால் உருவாகக்கூடும் என்று அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள் அதை என்னவென்று பார்ப்போம்.

 1.பரம்பரை மற்றும் மரபணு மாற்றங்கள்.
2.உடலில் ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றங்கள்.   
 3.உணவு பழக்கவழக்கங்கள்.
 4.சுற்றுப்புறச்சூழல். 
5.உறவுகள் இடையே உள்ள  பிரிவுகளின் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாத  நிலையின் காரணமாக.
6தன்னம்பிக்கையின்மை.

 மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தின் அறிகுறிகள் :

* பசியின்மை
 *தூக்கமின்மை அல்லது அதிக *தூக்கம் 
*சோகம்
* கோபம் 
*துக்கம்
* உடல் களைப்பு
*முடிவு எடுப்பதில் சிரமம்  
*உடல் எடை குறைதல்
* எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு செலுத்தாமல் இருப்பது
* குற்ற உணர்வுடன் இருப்பது 
*இயலாமை 
 *தன்னம்பிக்கையின்மை
 *நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோடு கூட தொடர்பு குறைவு 
*தலைவலி 
*குற்ற உணர்வு 
*தற்கொலை எண்ணங்கள் மற்றும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளுதல் 
*சந்தோஷமான விஷயங்களில் கூட ஆர்வமின்மை   
 *தனிமை விரும்புதல்

மனச்சோர்வை குறைப்பதற்கான வழிமுறைகள் :

 நடை பயிற்சி 
      மனதில் ஏதாவது சஞ்சலங்கள் ஏற்பட தொடங்கிவிட்டால் வெளியில் காற்றாட கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும்.
 இசை 
        எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இனிமையான இசை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். இசையை கேட்பதன் மூலமாக உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
 
இயற்கை அன்னை
      இயற்கை அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய  வரப்பிரசாதம் . எனவே அதனை  சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .மனம் சோர்வாக இருக்கும் பொருட்டு நேரம் கிடைக்கும் சமயங்களில் வெளியே அமர்ந்து  மேகங்களின் நகர்வுகளை ரசிப்பதும் பச்சை பசேலென்று உள்ள மரங்களை சில வினாடிகள் பார்ப்பதன் மூலம் மனதில் உள்ள அழுத்தங்கள் குறையும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
  
 சமச்சீர் உணவு 
       பழங்கள் ,காய்கரிகள் ,மாமிசம் ,தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை  உட்கொள்ள வேண்டும்.
 சிறிது நேரம்
     நேரம் கிடைக்கும் பொழுது தங்களுடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நகைச்சுவையாக பேசுதல் மற்றும் தங்களுடைய சூழ்நிலைகளை அவர்களிடம் கூறி அதற்கேற்றவாறு ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதன் மூலமாக மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
 டைரி எழுதுதல்
      தங்களுடைய உணர்வுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத நபர்கள் தங்களுடைய உணர்வுகளை தினசரி எழுத்து மூலமாக தெரிவிப்பதன் மூலம் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
 மனநல வல்லுநரிடம் பேசுவது 
     மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி  ஆலோசகர்களிடம் பேசுவது.இதன் மூலம் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.
 நிகழ்கால வாழ்வு 
     இறந்த காலத்தில் நடந்தவற்றை எண்ணி வருத்தப்படாமல் ,எதிர்காலத்தை மற்றுமே  யோசிக்காமல் , நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
    தூக்கம் மற்றும் நேர்மறையான சிந்தனைகள்
    எதிர்மறையான சிந்தனைகளை தவிர்த்து எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளை வாழ்வின் நோக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
     தினமும் இரவு 7 முதல் 8 மணி நேரம் வரை நன்றாக  உறங்குவதால் மனச்சோர்வை குறைக்கலாம் . 
தனிமையை தவிர்ப்பது
     தனிமையில் இருந்தால் மனச் சோர்வு குறையும் என்று அர்த்தமில்லை, இன்னும் அதிகமாகத்தான் ஆகும்.எனவே தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அதற்காக கூட்டத்தோடு இருக்க வேண்டும் என்று பொருள் அல்ல தங்களுக்கு பிடித்த ஒருவருடன் சிறிது நேரம்   செலவிட்டால்  மனச்சோர்வு குறையும்.


 அதிமனச்சோர்வு காணப்படும் நபர்கள் கண்டிப்பாக மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
   

1 comment:

நீராவி பிடிப்பதன் பயன்கள் – Aavi Pidithal Benefits

 இன்றைய காலகட்டத்தில் பல வகையான நோய்கள் நம்மைத் தாக்கி கொண்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள...